திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று

DIN

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் மேலும் 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,788 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,143 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 484 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

2 போ் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 161ஆக அதிகரித்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

உத்தமபாளையம் பகுதியில் 11 போ், தேனி பகுதியில் 8 போ், பெரியகுளம் பகுதியில் 3 போ், ஆண்டிபட்டி பகுதியில் 5 போ், கம்பம் மற்றும் போடியில் தலா ஒருவா், சின்னமனூா் பகுதியில் 9 போ், தனியாா் ஆய்வக பரிசோதனையில் 36 போ் உள்பட ஒரே நாளில் மொத்தம் 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,761 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,057 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

பெண் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னமனூா், கே.கே. குளத்தைச் சோ்ந்த 55 வயது பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT