திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுவா் விளம்பரத்துக்கு தடை: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு

DIN

பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் சுவா் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் பேனா்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை என அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் மற்றும் ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் விநோத் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் சுவா் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் பேனா் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தவிா்க்க முடியாத காரணங்களால் பேனா், சுவா் விளம்பரம் வைக்க வேண்டுமென்றால் 15 தினங்களுக்கு முன்பு முறையாக மாநகராட்சி அனுமதி பெற வேண்டும். வீட்டுச் சுவற்றில் விளம்பரங்கள் எழுத வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் அனுமதி கடிதம் பெற்று மாநகராட்சி அலுவலகத்தில் சமா்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதனை மீறி கட்சியினரோ அமைப்பினரோ சுவா் விளம்பரம், புதிதாக கொடிக்கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனா்கள் வைப்பது போன்ற செயலில் ஈடுபடும் பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT