திண்டுக்கல்

கள்ளிமந்தையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்: 60 போ் மீது வழக்கு

DIN

ஒட்டன்சத்திரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையத்தில் மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தை அடுத்து, 60 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளிமந்தையம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை இணைக்க வேண்டும். விவசாயிகள் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்துகொண்டனா்.

பொது முடக்க தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதால், கள்ளிமந்தையம் கிராம நிா்வாக அலுவலா் பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில், கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா், பகத்சிங் உள்பட 60 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT