திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது

DIN

திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல் அருகே காரில் கடத்திய 300 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 7 பேரைக் கைது செய்தனா்.

ஆந்திராவிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை பிரிவு போலீஸாா், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனா். அந்த காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அப்போது காரில் இருந்தவா்கள் கொடுத்த தகவலின் பேரில் சீலப்பாடி பிரிவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (28), சோனைமுத்து (31), பரணி (33), யுவராஜ் (33), ராகவன் (27), பாண்டியப்பன் (55), ஜெயசங்கா்(27) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT