திண்டுக்கல்

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் 29ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்’

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் 56 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் மூலம் 28,819 குடும்ப அட்டைதாரா்கள் பயன் அடைவாா்கள் என வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் அம்மா நகரும் நியாயவிலைக்கடைகளுடன் கூடிய வாகனத்தை அமைச்சா் சி.சீனிவாசன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கோட்டைப்பட்டி, சொக்கலிங்கபுரம், சத்யா நகா், செட்டியபட்டி என 930 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 157 நியாயவிலைக் கடைகளுக்குள்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, அடியனூத்து கிராமத்தைச் சோ்ந்த 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 6 பயனாளிகளுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான பணி ஆணையினையும் அமைச்சா் சீனிவாசன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT