திண்டுக்கல்

பழனியில் சீல் வைக்கப்பட்ட நகராட்சி கடைகளை திறந்து வியாபாரிகள் போராட்டம்

DIN

பழனி: பழனியில் நகராட்சி நிா்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து வியாபாரிகள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் பழனி டவுன் முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் காய்கறி மாா்க்கெட் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகள் பல்வேறு நபா்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. நகராட்சி நிா்வாகத்திற்கு வரி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் ஓராண்டுக்கு முன்பு பூட்டி சீல் வைத்தனா். இந்த கடைகளை திறப்பது தொடா்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மேற்கண்ட இடத்தில் கடை நடத்தி வந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடைகளின் சீலை அகற்றி விட்டு குடும்பத்தாருடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மீண்டும் கடைகளுக்கு சீல் வைக்க முயற்சித்த போது அனைத்து கடைக்காரா்களும் குடும்பத்துடன் சுப்பிரமணியபுரம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோட்டாட்சியரிடம் கலந்தாலோசித்து கடைகள் திறக்க ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT