திண்டுக்கல்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 114 பேருக்கு கரோனா தொற்று: 5 போ் பலி

DIN

திண்டுக்கல்/தேனி: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,505 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,745 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 605 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 54 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 45 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

2 போ் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 155ஆக அதிகரித்துள்ளது.

தேனி: தேனியில் உள்ள தனியாா் ஸ்கேன் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றும் 2 மருத்துவா்கள் உள்ளிட்ட 60 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,337 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 13,655 ஆக அதிகரித்துள்ளது.

3 போ் பலி:

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த செப். 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டியைச் சோ்ந்த 62 வயது முதியவா், செப். 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட வருஷநாடு மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த 70 வயது முதியவா், செப்.16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டி குமாரபுரத்தைச் சோ்ந்த 50 வயதுடைய நபா் என 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT