திண்டுக்கல்

கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு சிரமம்

19th Sep 2020 06:51 PM

ADVERTISEMENT

கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் கடந்த 10ஆம் தேதி முதல் நகர்ப்பகுதிகளிலுள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜாத் தோட்டம் மற்றும் சாலையோரங்களிலுள்ள நீர் அருவிகளை பார்ப்பதற்கும் இயற்கை எழில்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கும், குளுமையை அனுபவிப்பதற்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நகரப் பகுதிகளான அண்ணாசாலை, பேருந்து நிலையப் பகுதி, செவண்ட்ரோடு, காமராஜர் சாலை ஆகியப் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர ஆங்காங்கே உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்குகளையும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். 

போக்குவரத்து விதிகளை யாரும் கடைபிடிப்பதில்லை, இதனால் நகர்ப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து அதிகாரிகள் இல்லாததலும் காவலர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாலும் நகரின் பல இடங்களில் வாகனப் போக்குவரத்திலும் வாகனங்களை முறையாக நிறுத்துவதிலும் பிரச்னை இருந்து வருகிறது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : Kodaikanal
ADVERTISEMENT
ADVERTISEMENT