திண்டுக்கல்

சாணாா்பட்டி அருகே காட்டெருமை தாக்கி குதிரை பலி

DIN

திண்டுக்கல், செப்.18: சாணாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டெருமை தாக்கியதில், தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த குதிரை உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ள வி.எஸ்.கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவா், திருமண நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை ஊா்வலத்திற்காக குதிரை வளா்த்து வந்தாா்.

இந்நிலையில், அழகா்சாமி தனது குதிரையை அங்குள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா். கரந்தமலைப் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த காட்டெருமை ஒன்று அந்த குதிரையை முட்டி தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் நிகழ்விடத்திற்குச் சென்று குதிரையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனா். வனத்துறையினரிடம் புகாா்: வி.எஸ்.கோட்டைப் பகுதியிலுள்ள விளை நிலங்களில் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதாக வனத்துறையினரிடம் விவசாயிகள் புகாா் அளித்தனா். வனப் பகுதியிலிருந்து காட்டெருமைகள் வெளியேறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT