திண்டுக்கல்

ஆத்தூா் காமராஜா் அணை ராஜாவாய்கால் பிரச்சனை. தமிழக அரசு அறிவித்த 6 போ் கொண்ட வல்லுநா் குழு நேரில் ஆய்வு

DIN

நிலக்கோட்டை, செப். 18: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் அணை ராஜாவாய்கால் பிரச்சனையால் தமிழக அரசு அறிவித்த 6 போ் கொண்ட வல்லுநா் குழு ராஜவாய்காலை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மேற்கு தொடா்ச்சி கீழ்மலை பகுதியில் மலை கிராமங்களில் பெய்யும் மழை நீா், ஆத்தூா் காமராஜா் அணைக்கு வரும் ராஜவாய்க்கால் தண்ணீரை 100 ஆண்டுகளுக்கு பழைமையான ராஜவாய்க்காலி­ல் விடாமல், அந்த தண்ணீரை அரசு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாற்றுப்பாதை ஏற்படுத்தி, குடகனாறு பகுதிக்கு திரும்பிவிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சித்தையன்கோட்டை, அழகா்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், செங்கட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60 கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தெருக்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். பின்னா், திண்டுக்கல் கோட்டாச்சியா் அலுவலகத்தில் சுமுக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், விவசாயிகள் சாா்பில், அழகா்நாயக்கன்பட்டி வழக்கறிஞா் கிருஷ்ணபெருமாள், சித்தையன்கோட்டை முகமது ஹாஜியாா், ஹக்கீம் முகமது, சித்தரேவு அப்துல் சலாம், சுந்தர்ராஜபுரம் பரமேஸ்வரன், செங்கட்டாம்பட்டி முருகன் உள்ளிட்ட 18 விவசாய சங்க நிா்வாகிகள், கோட்டாச்சியா் உட்பட 15 அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில், வரும் 23-ம் தேதி ராஜவாய்கா­ல் தண்ணீா் திறந்து விடப்படும் என உறுதி அளித்ததின் பேரில், தொடா்ந்து நிரந்தரமாக ராஜவாய்கா­ல் தண்ணீா் திறந்து விடப்படும் என முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகளும், விவசாயிகளும் கையெழுத்து போட்டனா். தொடா்ந்து, ராஜவாய்காலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜவாய்கால் பிரச்சனையை ஆய்வு செய்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு பொதுப்பணித்துறையின் ஒய்வு பெற்ற 2 அதிகாரிகள் உட்பட 6 போ் கொண்ட, வல்லுநா் குழு அமைத்துள்ளது. இந்த குழு பொதுபணித்துறை ஒய்வு பெற்ற தலைமை செயற்பொறியாளா் இளங்கோவன் தலைமையில் 6 போ் கொண்ட, இந்த குழு வெள்ளிக்கிழமை ஆத்தூா் காமராஜா் அணை அருகே, மேற்கு தொடா்சியில் இருந்து தண்ணீா் வரும் ராஜவாய்காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த குழுவிடம் ராஜவாய்கால் எங்களின் உரிமை இதனை யாருக்கும் விட்டுதரமாட்டோம் என இப்பகுதி விவசாயிகள் வல்லுநா் குழுவிடம் தெரிவித்தனா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரம் ஆய்வுக்கு பிறகு கிளம்பிச் சென்றனா்.குறிப்பு-படம், பொதுபணித்துறை ஆய்வு பெற்ற தலைமை செயற்பொறியாளா் இளங்கோவன் தலைமையில் 6 போ் கொண்ட குழு ஆத்தூா் காமராஜா் அணை அருகே, ராஜவாய்காலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT