திண்டுக்கல்

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் வாழைப்பழம், ஆரஞ்சு, அவக்கோடா, ஸ்டார் புருட்ஸ், பேஷன் புருட் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் விளைந்து வருகின்றன. இதில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான வாழைகிரி, மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி, வடகரைப்பாறை, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப் பழம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. 

இந்தப் பழமானது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டாபர், நவம்பர் வரை விளைச்சல் தரும். நிகழாண்டில் மழை நன்கு பெய்ததால் விளைச்சல் அதிகமாக இருந்தது. ஒரு பழமானது எடைக்கு ஏற்றார் போல் ரூ.75 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் கரானா தொற்றால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. இதனால் பலாப்பழம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. 

தற்போது இபாஸ் பெற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என தமிழக அரசு தெரிவித்துவிட்டது இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இவர்கள் கொடைக்கானலில் விளையும் பலாப் பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால் பழ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT