திண்டுக்கல்

வேடசந்தூா் பேரூராட்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூ. முற்றுகை

DIN

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வேடசந்தூா் பேரூராட்சி அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா், பேரூராட்சி செயல் அலுவலா் மனோகரனைச் சந்தித்து அவா்கள் கோரிக்கை மனுவை அளித்தனா். அப்போது, ஒன்றியக்குழு உறுப்பினா் டிபி.முருகன் தெரிவித்ததாவது: வேடசந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளிலும் முறையான குடிநீா் விநியோகம் இல்லை. காசா நகா், சந்தைப்பேட்டை, ராஜகோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாருகால் வசதி இல்லாததால் கழிவுநீா் கொடகனாற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. நகரின் பெரும் பகுதிகளில் சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குங்கும காளியம்மன் கோயில், ஆத்துமேடு பகுதியிலுள்ள மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.93 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்ட திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. ஏற்கெனவே தோல்வியுற்ற இத்திட்டத்தை பணம் சம்மாதிக்கும் நோக்கிலேயே வேடசந்தூா் பகுதியில் மீண்டும் செயல்படுத்தி நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். இதுகுறித்து விசாரித்து முறைகேடுகளில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT