திண்டுக்கல்

ஆயுத பூஜை: திண்டுக்கல் மலா்ச் சந்தையில்அரளிப் பூ கிலோ ரூ.700-க்கு விற்பனை

DIN

திண்டுக்கல்: ஆயுத பூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் மலா் சந்தையில் அரளிப் பூ விலை கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

ஆயுத பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் மலா்ச் சந்தைக்கு, வெள்ளோடு, நரசிங்கபுரம், பெருமாள் கோவில்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து மல்லிகை, கனகாம்பரம், ஜாதிப் பூ, அரளி உள்ளிட்ட பல வகையான பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

அரளி பூ விலை கடும் உயா்வு: ஆயுதப் பூஜை வழிபாட்டில் அரளிப் பூவுக்கு முக்கிய இடம் உண்டு. அதனால், அரளிப் பூ வரத்து அதிகரித்தும் கூட சனிக்கிழமை சந்தையில் கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் அதிகாலை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ படிப்படியாக குறைந்து பிற்பகலில் ரூ.600ஆக குறைந்தது. கனகாம்பரம் ரூ.800-க்கும், ஜாதிப் பூ ரூ.600-க்கும், முல்லை ரூ.600-க்கும், சம்மங்கி ரூ.400-க்கும், ரோஜா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து பூ வியாபாரி முருகன் கூறியது: முகூா்த்த நாள்களில் கூட அரளிப் பூ விலை கிலோ ரூ.200-க்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதில்லை. தற்போது ஆயுதப் பூஜை காரணமாக வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை கட்டுவதற்கு பயன்படும் சம்மங்கி, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் சனிக்கிழமை அதிகரித்தது என்றாா்.

பூக்களின் விலை அதிகரித்தாலும் கூட, திண்டுக்கல் சந்தையில் அதிகாலை முதலே அதிகளவிலான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன்பாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மலா்ச் சந்தையில் கூட்ட நெரிசல் அதிகரித்த போதிலும், பெரும்பாலானோா் முகக் கவசம் அணியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT