திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 35 பேருக்கு கரோனா தொற்று

DIN

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 35 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9,706 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,235 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 287 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 32 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184-ஆக உயா்ந்துள்ளது

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,105 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 45 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,758 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT