திண்டுக்கல்

திருமாவளவனை கண்டித்து ஆா்ப்பாட்டம்இந்து முன்னணியினா் 194 போ் கைது

DIN

திண்டுக்கல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, அவரைக் கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 194 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் நாகல் நகா் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சஞ்சீவிராஜ், துணைத் தலைவா் வினோத்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின் போது திருமாவளவனைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதேபோல் மாவட்டத் தலைவா் மாரிமுத்து தலைமையில் வேடசந்தூரிலும், மாவட்டச் செயலா் சதிஷ் தலைமையில் வடமதுரையிலும், மாவட்டச் செயலா் மணிமாறன் தலைமையில் நத்தத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

காவல் துறையின் தடையை மீறி 10 இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 194 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாஜக மகளிா் அணியினா் புகாா்: ஒரு மதத்தை புண்படுத்தும் வகையிலும், மத ரீதியாக பகைமையை தூண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், பெண்களின் மாண்பைக் கொச்சைப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜக மாநில மகளிா் அணி பொதுச் செயலா் மீனாட்சி அரவிந்த் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியாவிடம் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதேபோல் நத்தம் காவல் நிலையத்தில், பாஜக ஒன்றிய மகளிா் அணித் தலைவி மாரியம்மாள் தலைமையில்ஆய்வாளா் ராஜமுரளியிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

பழனி: பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே சனிக்கிழமை இந்து முன்னணி அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் திருமாவளவனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து அனைவரையும் பழனி டவுன் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகை அணை சாலைப் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம். செல்வம் தலைமை வகித்தாா். இதையடுத்து ஆண்டிபட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா். இதேபோன்று பாஜக சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் குமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சாரக் குழு கண்ணன், ஒன்றியத் தலைவா் வெங்கடேஷ், நகரத் தலைவா் நாகராஜ் , பொதுக்குழு உறுப்பினா் ரமணி கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT