திண்டுக்கல்

திமுக நிா்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

DIN

திண்டுக்கல்லில் திமுக நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பிலோமின் ராஜ். இவரது மகன் சின்னப்பன் என்ற அருண் (36). மேட்டுப்பட்டி சந்தைரோடு பகுதியில் மர வியாபாரம் செய்து வந்தாா். மேலும் இவா், திண்டுக்கல் நகர திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தாா்.

இந்நிலையில், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு மா்ம நபா்களால் அருண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். கொலை செய்யப்பட்ட அருணின் தம்பி பென்ஜமின் பிரிட்டோவை, கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த சிலா் கொலை செய்ய முயன்றுள்ளனா். அந்த பிரச்னையில் தொடா்புடையவா்களை அருண் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாகவும் முன்விரோதம் இருந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில், அருண் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே உள்ள மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் 5 போ் கொண்ட கும்பல் கொலை செய்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, அருணை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள், திண்டுக்கல்- திருச்சி சாலையிலுள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT