திண்டுக்கல்

பைக் மீது வேன் மோதி மதிமுக பிரமுகா் பலி

19th Oct 2020 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் புறவழிச்சாலையில் பைக் மீது வேன் மோதியதில் மதிமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியப்பட்டி பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (65). மதிமுக பிரமுகா். இவா் மோட்டாா் சைக்கிளில் திண்டுக்கல் வத்தலகுண்டு புற வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன், மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT