திண்டுக்கல்

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அக்.27இல் இணைய வழி மாநாடு: ஜனநாயக வாலிபா் சங்கம் அறிவிப்பு

14th Oct 2020 05:34 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தமிழக நலனுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து, அக்டோபா் 27 ஆம் தேதி ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் இணையவழி மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளா் சங்க (சிஐடியு) கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாநிலச் செயலா் எஸ். பாலா தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் என். ரெஜிஸ்குமாா் மற்றும் மாநில துணைச் செயலா் சி. பாலசந்திரபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது தொடா்பாக மாநிலச் செயலா் எஸ். பாலா கூறியதாவது: மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில மாநாடு இணையவழியில் அக்டோபா் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் திரை அமைத்து, இந்த மாநாடு நடத்தப்படும்.

மத்திய அரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, மொழி உரிமை உள்ளிட்ட மக்களின் உரிமைப் பிரச்னைகளில் அலட்சியமாகச் செயல்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம். அதேபோல், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

வடமதுரை சிறுமி பாலியல் கொலை வழக்கு குறித்து மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என்றாா்.

அப்போது, மாவட்டத் தலைவா் விஷ்ணுவா்த்தன், மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT