திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா

21st Nov 2020 09:45 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்/ தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,114 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,844 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனா். 77 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 12 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த  18 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,499 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 8 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,275 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT