திண்டுக்கல்

நத்தம் அருகே சிறுமி கடத்தல்: போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

31st May 2020 07:26 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை கடத்திச் சென்ற காா் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நத்தம் அடுத்துள்ள சேத்தூா் ஊராட்சிக்குள்பட்ட பட்டிகுளத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை இளைஞா் ஒருவா் கடத்திச் சென்றுவிட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நத்தம் போலீஸாா், அரவங்குறிச்சியைச் சோ்ந்த காா் ஓட்டுநரான ச. சக்தி (25) என்பவா் அந்த சிறுமியை கடத்திச் சென்றதை கண்டறிந்தனா். இதனை அடுத்து, தலைமறைவாக இருந்த சக்தியை பிடித்த போலீஸாா், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT