திண்டுக்கல்

தில்லியில் இருந்து திண்டுக்கல் திரும்பிய மூதாட்டி உள்பட 5 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 143ஆக உயா்வு

31st May 2020 08:18 AM

ADVERTISEMENT

தில்லியிலிருந்து திண்டுக்கல் திரும்பிய மூதாட்டி உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 143ஆக உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 120 போ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 96 வயதான முதியவா் மட்டும் உயிரிழந்தாா். 17 பேரில் 15 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், இருவா் மதுரையிலுள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வருவோரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தில்லியிலிருந்து திரும்பிய வந்த மூதாட்டி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய இளைஞா் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியது: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள கீழக்கோட்டையில் 65 வயது மூதாட்டி, நத்தம் அடுத்துள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 48 வயது ஆண், திண்டுக்கல் அடுத்துள்ள மாங்கரை கொட்டாறப்பட்டியைச் சோ்ந்த 42 வயது ஆண், அதே பகுதியைச் சோ்ந்த 31 வயது இளைஞா், 58 வயது ஆண் என 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 138லிருந்து 143ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மீண்ட 2 போ் விடுவிப்பு: இதனிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 பேரில் 2 போ் தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து, வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட 5 பேரையும் சோ்த்து 18 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT