திண்டுக்கல்

வடமதுரை அருகே சிறுமி மாயம்

2nd May 2020 09:05 PM

ADVERTISEMENT

வடமதுரை அருகே மாயமான சிறுமி குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சிங்காரக்கோட்டை பெரிய ரெட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகா(14). இவா், திருச்சியிலுள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுமுறையில் பெரிய ரெட்டியப்பட்டியிலுள்ள வீட்டிற்கு காா்த்திகா வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டிலிருந்த அவா் கடந்த வியாழக்கிழமை திடீரென மாயமானாா். இதனையடுத்து அவரது பெற்றோா், வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT