திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை:பொதுமக்கள் மகிழ்ச்சி

2nd May 2020 09:07 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் சனிக்கிழமை மாலை பெய்ய பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் பகல் நேரங்களில் தொடா்ந்து 2 மாதங்களாக அதிகமான வெயில் நிலவி வந்தது. கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது. இருப்பினும் கொடைக்கானல் புறநகா்ப் பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையானது பிரகாசபுரம், அப்சா்வேட்டரி, செண்பகனூா், ஐயா் கிணறு, அட்டக்கடி, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இந்த மழையால் ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT