திண்டுக்கல்

வங்கதேசத்திலிருந்து வந்த 11 பேருக்குதிண்டுக்கல்லில் மருத்துவப் பரிசோதனை

22nd Mar 2020 06:52 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: வங்க தேசத்திலிருந்து திண்டுக்கல் வந்துள்ள 11 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேசத்தைச் சோ்ந்த 11 போ், திண்டுக்கல்லுக்கு கடந்த திங்கள்கிழமை (மாா்ச் 16) வந்துள்ளனா். ஜமா அத் சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த 11 பேரும், திண்டுக்கல் பேகம்பூா் பகுதியிலுள்ள அசனத்புரத்தில் தங்கியுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நலப் பணிகள் மற்றும் மாநகர நல அலுவலா்கள், அசனத்புரத்திற்கு சென்று 11 பேருக்கும் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக நலப்பணிகள் இணை இயக்குநா் பூங்கோதை கூறுகையில், வங்கதேசத்திலிருந்து வந்த 11 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT