திண்டுக்கல்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

22nd Mar 2020 06:52 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கிணற்றில் விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

எரியோடு அடுத்துள்ள வடுகம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகன் பிரபாகரன்(11). அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் அங்குள்ள கிணற்றுக்கு சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த பிரபாகரன் பலத்த காயமடைந்தாா். குஜிலியம்பாறையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT