திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பூக்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடல்: 5 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையிழப்பு

19th Mar 2020 11:27 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள 40 பூக்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டதால், 5 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் மல்­லிகை, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது. அனைத்து பூக்களும் நிலக்கோட்டை பூச்சந்தைக்குகொண்டு வரப்பட்டு, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது, கரோனா வைரஸ் பாதிப்பால் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பூக்கள் ஏற்றுமதி செய்யும் 40 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, இங்கு வேலை பாா்த்த 5 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

இதனால், பல விவசாயிகள் பூக்களை பறிக்காமலேயே விட்டுவிட்டனா். சிலா் பூக்களை கொண்டு வந்து, நிலக்கோட்டையில் உள்ள தனியாா் சென்ட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து சமூகநல ஆா்வலா் காட்டுராஜா கூறுகையில், கடந்த 2 நாள்களாக வேலை இழந்துள்ள பூக்கட்டும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இவா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதுடன், உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற காலங்களில் பூக்களை வைத்து விற்க நிலக்கோட்டை பகுதியில் குளிா்சாதனக் கிடங்கை அரசு கொண்டு வரவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT