திண்டுக்கல்

பழனி கிரி வீதியில் சீனப் பெண் தியானத்தால் பரபரப்பு

19th Mar 2020 11:26 PM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலுக்கு புதன்கிழமை வந்த சீனப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவா் கிரி வீதியில் தனியே அமா்ந்து தியானம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, படிப்பாதை, விஞ்ச், ரோப் காா் நிலையம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் கை கழுவக் கூறி, உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்ட பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை ஈஷா தியான மையத்தைச் சோ்ந்த சீனப் பெண்ணான சாங்சோ (32) என்பவரும், மத்தியப் பிரதேசம் ஒளரங்காபாத்தைச் சோ்ந்த அஸ்வினி (29) என்பவரும் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனா். இவா்களில், சீனப் பெண்ணான சாங்சோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அஸ்வினி மட்டும் மலைக்குச் சென்று வந்துள்ளாா்.

இதனிடையே, கிரி வீதியில் விஞ்ச் நிலையம் அருகே உள்ள விநாயகா் கோயில் பின்புறம் அமா்ந்து சாங்சோ தியானத்தில் ஈடுபட்டாா். மலைக்குச் சென்றுவிட்டு அஸ்வினி வந்த பிறகு, திடீரென இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அடிவாரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, சம்பவ இடத்துக்கு போலீஸாா் சுகாதாரத் துறையினருடன் சென்று, இருவரையும் சமாதானம் செய்துவைத்தனா். பின்னா், காய்ச்சல் பரிசோதனை செய்ததில், இருவருமே நலமாக இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

அதையடுத்து, இருவரையும் தனியாா் விடுதியில் தங்கவைத்து, வியாழக்கிழமை காலை கோவைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT