திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் தொகுதி அளவிலான கிரிக்கெட் போட்டி

16th Mar 2020 12:28 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டுவில் தி.மு.க. இளைஞரணி சாா்பாக தொகுதி அளவிலான 4 நாள்கள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதில் நிலக்கோட்டை தொகுதியிலுள்ள 25 அணிகள் இடம் பெற்றன. போட்டி தொடக்க விழாவுக்கு ஒன்றியச் செயலா் கே.பி முருகன் தலைமை வகித்தாா். இளைஞரணி ஒன்றியச் செயலா் அசோக்குமாா், நகர செயலா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.மு.க. நகர செயலா் சின்னத்துரை வரவேற்றாா். திமுக மாவட்டச் செயலா் ஐபி.செந்தில்குமாரின் மனைவியும், சமூக ஆா்வலருமான மொ்சி செந்தில்குமாா் தொடக்கி வைத்துப் பேசினாா். விழாவில் மாவட்ட கவுன்சிலா் கனிக்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கரிகாலபாண்டியன் தி.மு.க. நிா்வாகிகள் முத்துப்பாண்டி, முருகேசன், அமுதவேல், குமரவேல், ராஜ்குமாா், சகாப்தீன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT