திண்டுக்கல்

கொடைக்கானலில் பெண் தற்கொலை

13th Mar 2020 12:29 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் குடும்பப் பிரச்னை காரணமாக தீக்குளித்த பெண் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் பச்சைமரத்து ஓடை சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சத்யா (37). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கணவா்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

புதன்கிழமையும் வழக்கம்போல் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது, இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடி வந்து சத்யாவை மீட்டுள்ளனா். பின்னா், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சத்யா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில், கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT