திண்டுக்கல்

வடமதுரையில் இளம் பெண்தூக்கிட்டு தற்கொலை

8th Mar 2020 12:25 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வடமதுரையை அடுத்துள்ள சீத்தப்பட்டி பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா். வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், கரூா் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சோ்ந்த ஜோதிகா(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தள்ளது.

அதனைத் தொடா்ந்து இருவரும், வடமதுரை சத்யா நகரில் தனியாக வசித்து வந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை சரவணக்குமாா் வேலைக்கு சென்ற பின்னா், ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா் ஜோதிகாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT