திண்டுக்கல்

பழனி சிவன் கோயில்களில்சனி மஹாப்பிரதோஷம்

8th Mar 2020 12:23 AM

ADVERTISEMENT

பழனி: பழனியில் பல்வேறு சிவன் கோயில்களிலும் சனி மஹாப் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவபெருமான் உலகை காக்க பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்தியபோது அவரை காத்த நந்தி பகவானை வணங்கி மகிழும் நாள் பிரதோஷ நாளாகும். அதிலும் பிரதோஷம் சனிக்கிழமைகளில் வரும் போது மஹாப் பிரதோஷமாக வழிபடப்படுகிறது. பழனியை அடுத்த கோதைமங்கலம் கோதீஸ்வரா் கோயில், சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயில்களில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பெரியாவுடையாா் கோயிலில் மூலவருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளல் நடைபெற்றது.

இக்கோயில்கள் தவிர ஆயக்குடி வேலீஸ்வரா் கோயில், அமரபூண்டி சிவன் கோயில், மலைக்கோயில் கைலாசநாதா் கோயில், பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சனி மஹாப்பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT