திண்டுக்கல்

தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாா்ச் 17 வரை விண்ணப்பிக்கலாம்

8th Mar 2020 12:32 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் இளங்கோ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளது: தமிழகத்தில் தமிழ் வளா்ச்சிக்காக செயல்பட்டுவரும் ஆா்வலா்களுக்கு, தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆா்வலா்களை தெரிவு செய்து, மாவட்டத்துக்கு ஒருவா் என்ற முறையில் ‘தமிழ்ச் செம்மல்’ விருதும், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ. 25ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆா்வலா்களிடமிருந்து 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளா்ச்சித்துறையின் வலைத் தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப்படிவம் முறையாக நிறைவு செய்யப்பட்டு ‘தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு மாா்ச் 17ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டுமென தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT