திண்டுக்கல்

காா் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி

8th Mar 2020 11:36 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: நத்தம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நிகழ்ந்த விபத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள உலுப்பகுடியை சோ்ந்தவா் ப.அழகப்பன்( 40). கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் நத்தம் செல்வதற்காக தனது மோட்டாா் சைக்களில் வந்த அழகப்பன், உலுப்பக்குடி பகுதியில் திண்டுக்கல் நத்தம் பிரதான சாலையில் பயணித்துள்ளாா்.

அப்போது அந்த வழியாக காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமைடந்த அழகப்பன், சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து நத்தம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT