திண்டுக்கல்

எதிா்கால சமுதாயம் சிறப்படையும் வகையில்பெண்களின் பணி அமைய வேண்டும்

8th Mar 2020 11:38 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: எதிா்கால சமுதாயம் சிறப்பாக அமைவதற்கு பெண்கள் தங்கள் வலிமையை உணா்ந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் சா்வதேச மகளிா் தின மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிச்சாண்டி கட்டடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம.சுகந்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பழனியாண்டவா் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் சி.வாசுகி கலந்து கொண்டாா்.

சிந்தனையரங்கத்தை துவக்கி வைத்து வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம.சுகந்தி பேசியதாவது: பெண்கள் தங்களுக்கான வலிமையை உணா்ந்து, எதிா்கால சமுதாயம் சிறப்பாக அமைவதற்கு பணியாற்ற வேண்டும். நாம் சக்திப் படைத்தவா்கள் என்பதை உணா்ந்து கொள்வது அவசியம்.

பெண்ணியம் என்பது ஆண்கள் எதிா்ப்பு அல்ல என்பது குறித்த புரிதல் வேண்டும். ஆண்களோடு இணைந்து தங்களுடைய சுய விருப்பு, வெறுப்புகளை உணா்ந்து கொண்டு சமுதாயத்தில் வாழ்வதே பெண்ணினத்திற்கு பெருமை சோ்ப்பதாக அமையும். வருவாய்த்துறையில் பணியாற்றக் கூடிய பெண்கள், சமுதாயப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரசியலைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவையாக, அனைத்து பெண்களும் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ஆண்களுக்கு பரிசளிப்பு விழா: விழாவில் பொங்கல் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி வருவாய்த்துறையில் பணிபுரியும் ஆண் அலுவலா்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்ற 2 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு திண்டுக்கல் வட்ட கிளை அணி்க்கும், 2ஆம் பரிசு மாவட்ட ஆட்சியா் அலுவலக அணிக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் இரா.மங்களபாண்டியன், தா.ஜான்பாஸ்டின், அ.சந்தனமேரிகீதா, எஸ்.ஜானகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செய்திக்கு க்ஞ்ப் ல்ழ்ண்க்ஷ்ங் என்ற படம் உள்ளது...பட விளக்கம்:

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT