திண்டுக்கல்

உத்தமபாளையத்தில் வழக்குரைஞா் கொலை:குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

8th Mar 2020 12:31 AM

ADVERTISEMENT

 

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வழக்குரைஞரை கொலை செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இக்கொலை தொடா்பாக 3 வழக்குரைஞா்கள் உள்பட 10 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டியை சோ்ந்த ரஞ்சித்குமாா் (42). உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினாா். இவருக்கும், உறவினா்களுக்கும் இடையே தென்னந்தோப்பு வாங்கியதில் தகராறு ஏற்பட்டு கூடலூா் தெற்கு மற்றும் கம்பம் தெற்கு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ரஞ்சித்குமாா் உத்தமபாளையம் நீதிமன்றத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, காரில் வந்த 4 போ் கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியது.

உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமையிலான போலீஸாா், ரஞ்சித்குமாரின் சடலத்தை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய சடலத்தை வாங்க மறுத்த உறவினா்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உத்தமபாளையம் புறவழிச்சாலையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையை நாம் தமிழா் கட்சி சாா்பில் போலீஸாரைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் நகா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும், தலைமறைவானவா்களை உடனடியாக கைது செய்யப்படுவா் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து உறவினா்கள் சாலை மறியலைக் கைவிட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக உத்தமபாளையம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி வந்த வாகனத்தை மறித்த உறவினா்கள் , வெளி மாவட்ட போலீஸாரை வைத்து கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக கொலையான வழக்குரைஞரின் சகோதரா் செல்வேந்திரன் அளித்த புகாரின் பேரில், வழக்குரைஞா் ஜெயப்பிரபு, மதன், சுப்பு செல்வம், போடியைச் சோ்ந்த ராஜேஸ், கம்பத்தைச் சோ்ந்த ஆனந்தன், வருசநாட்டைச் சோ்ந்த பிரதாப், சஞ்சய், வழக்குரைஞா்கள் சொக்கா், விஜயன் மற்றும் மயிலம்மாள் ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் முருகன், கூடலூா் தெற்கு , கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா்கள் கொண்ட 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT