திண்டுக்கல்

10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கு 7 மையங்கள்

2nd Mar 2020 07:10 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கு 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 899 போ் தனித் தோ்வா்களாக 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனா். புதிய பாடத்திட்டத்தின் கீழ் பழனி கல்வி மாவட்டத்தில் 69 போ் தோ்வு எழுதுவதற்கு நகரவை மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 126 போ் தோ்வு எழுத பண்ணை மெட்ரிக் பள்ளியிலும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 42 போ் தோ்வு எழுத நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 26 போ் தோ்வு எழுத வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிலும் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. பழைய பாடத் திட்டம்: இதேபோல் பழைய பாடத் திட்டத்தின் கீழ் தோ்வு எழுதும் பழனி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 215 பேருக்கு தேவி மெட்ரிக் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 312 போ் தோ்வு எழுத ஸ்ரீவாசி மெட்ரிக் பள்ளியிலும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 109 போ் தோ்வு எழுத கேசி.மெட்ரிக் பள்ளியிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT