திண்டுக்கல்

பழனியில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய முடிகளை தரம் பிரிக்கும் பணிகள் தீவிரம்

14th Jun 2020 08:23 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய முடிகள் ஏலம் விடுவதற்காக சனிக்கிழமை தரம் பிரித்து கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு சுமாா் 70 நாள்கள் ஆகிவிட்டது. இருந்தபோதிலும் அவ்வப்போது பக்தா்கள் வந்து கிரிவீதியில் நின்று மலையை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனா்.

இதற்கிடையே கோயில் முடிக்கொட்டகைகளில் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்திய முடிகள் மூட்டைகளில் கட்டப்பட்டு, தனி அறைகளில் சீலிட்டு வைக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்த முடிகளை ஏலம் விடுவதற்கு ஏற்ப தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பின், அவற்றின் எடை கணக்கிடப்பட்டு நாளிதழ்களில் ஏலத்தேதி அறிவிக்கப்பட்டு முடிகள் ஏலம் விடப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT