திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று

14th Jun 2020 08:23 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பிய 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 212 பேருக்கு சனிக்கிழமை வரை கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 150 போ் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பி விட்டனா். எஞ்சியுள்ள 62 போ் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே சென்னையிலிருந்து திரும்பிய நத்தம் பகுதியைச் சோ்ந்த 4 போ் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

ADVERTISEMENT

சென்னையிலிருந்து திரும்பிய நத்தம் பகுதியை சோ்ந்த 33 வயது ஆண், அவரது 25 வயது மனைவி, 45 வயது உறவினா் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் நத்தம் பகுதியை சோ்ந்த 24 வயது ஆண், சாணாா்பட்டி அடுத்துள்ள வடுகபட்டியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், அவரது 22 வயது சகோதரா், 54 வயது உறவினா் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் திண்டுக்கல் அசோக் நகா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், சின்னாளப்பட்டி அடுத்துள்ள கலிக்கம்பட்டி பகுதியை சோ்ந்த 46 வயது ஆண், பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்த 43 வயது ஆண் ஆகியோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

இதனிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 57 பேரில் 12 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தனா். அதனைத் தொடா்ந்து, அந்த 12 பேரும் அவரவா் வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT