திண்டுக்கல்

நத்தம் பகுதியைச் சோ்ந்த 4 போ் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று

13th Jun 2020 08:05 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 7 பேருக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: நத்தம் பகுதிக்கு 50 வயது ஆண், அவரது 45 வயது மனைவி, 8 வயது மகன் ஆகியோா் சென்னையிலிருந்து திரும்பி வந்துள்ளனா். இவா்களுக்கும், நத்தம் அடுத்துள்ள கோட்டையூா் பகுதியைச் சோ்ந்த செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து திரும்பிய 26 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், சத்திரப்பட்டி அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 59 வயது பெண், திண்டுக்கல் ராமா் காலனியை சோ்ந்த 27 வயது ஆண் மற்றும் கே.புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 18 மாத குழந்தைக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், பச்சிளம் குழந்தையை வடமதுரையிலுள்ள அதன் பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனா். சமீபத்தில் சென்னையிலிருந்து வடமதுரைக்கு திரும்பிய அந்த மூதாட்டிக்கு, 2 நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் மூலம் குழந்தைக்கும் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்தனா்.

தற்போது, திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 55 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT