திண்டுக்கல்

சென்னையிலிருந்து திண்டுக்கல் திரும்பிய தம்பதி உள்பட 5 பேருக்கு கரோனா உறுதி

7th Jun 2020 08:06 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 120 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பிவிட்டனா். முதியவா் மற்றும் மூதாட்டி என இருவா் மட்டும் உயிரிழந்தனா். 48 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே சென்னை மற்றும் புதுதில்லியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வந்தவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், சென்னையிலிருந்து திரும்பி வந்துள்ள ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அடுத்துள்ள சித்துவாா்பட்டியைச் சோ்ந்த 36 வயது நபா், சத்திரப்பட்டி அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 36 வயது நபா், அவரது 31 வயது மனைவி, உறவினரின் மகனான 10 வயது சிறுவன் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சென்னையிலிருந்து திரும்பி வந்தவா்கள். அதேபோல், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்த 20 வயது இளைஞா் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா், தில்லியிலிருந்து திரும்பி வந்துள்ளாா் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT