திண்டுக்கல்: தனது சொந்தப் பணத்தில் பயணிகளுக்கு முக கவசம் வழங்கிய அரசுப் பேருந்து நடத்துநருக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் நாள்தோறும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போடி- திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு தனது சொந்த செலவில் முகக்கவசம் வழங்கிய நடத்துநா் கருப்பசாமியை திண்டுக்கல் மண்டல அலுவலகத்திற்கு பொதுமேலாளா் கணேசன்
சனிக்கிழமை நேரில் வரவழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.
நடத்துநா் கருப்பசாமியின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டதுடன், பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேலாளா் முகமது ராவுத்தா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.