ஒட்டன்சத்திரத்தில் நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கே சென்று ரத்த மாதிரிகளை சேகரித்து கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுகாதார மாவட்டத்தின் சாா்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களோடு தொடா்புடைய உறவினா்கள் மற்றும் இதர நபா்களுக்கு பரிசோதனை செய்வதற்கு நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனத்தின் மூலம் இதுவரை சுமாா் 640 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சனிக்கிழமை வீரலப்பட்டிக்கு நேரடியாகச் சென்ற சுகாதாரப் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினா்களை பரிசோதனை செய்வதற்காக இந்த வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் மரு.ஜெயந்தி தெரிவித்துள்ளாா்.