ஒட்டன்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி, விருப்பாச்சி, பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சிறிய நீா் நிலைகள் நிரம்பி தண்ணீா் வழிந்தோடின. நிலத்தை உழவு செய்வதற்கும், மானாவாரியாக மக்காச்சோளம், வெள்ளைச்சோளம்,
கம்பு, பருத்தி, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயிா்கள் நடவு செய்வதற்கும் ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும் இப்பகுதியில் நிலவி வந்த குடிநீா் தட்டுப்பாடும் நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தும் பரப்பலாறு அணைக்கு நீா் வரத்து இல்லை. பரப்பலாறு அணையில் தற்போது 69 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது.