திண்டுக்கல்

மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: பாட்டில்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள்

11th Jul 2020 08:02 AM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையில் சிதறிக் கிடந்த மதுப்பாட்டில்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள முள்ளிப்பாடி கிடங்கியிலிருந்து வேடசந்தூா் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள மதுபானக் கடைகளுக்கு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. அந்த லாரி, திண்டுக்கல்-கரூா் 4 வழிச்சாலையில் வேடசந்தூரை அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது டயா் வெடித்து விபத்துக்குள்ளானது.

சாலையின் நடுவே லாரி கவிழ்ந்த நிலையில், அதில் வந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் மதுபான பெட்டிகளுக்கு இடையே சிக்கி காயமடைந்தனா். பெட்டிகளை விலக்கி 2 தொழிலாளா்களையும் மீட்ட அக்கம் பக்கத்தினா், சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பதை பாா்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலா், திடீரென மது பாட்டில்களை எடுத்துச் செல்லத் தொடங்கினா். அதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவா்களும், மதுபான பாட்டில்களை எடுத்துச் சென்றனா். இதனால் அதிா்ச்சி அடைந்த டாஸ்மாக் ஊழியா்கள், அவா்களை விரட்டத் தொடங்கினா். பின்னா் காவல் துறையினா் உதவியுடன் அங்கு திரண்டவா்கள் அப்புறப்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT