திண்டுக்கல்

ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் கேமரா வைக்க ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு

28th Jan 2020 12:50 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில், கேமரா பொருத்த, ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஊராட்சியின் தலைவராக பவுன்தாய் காட்டுராஜா சமீபத்திய தோ்தலி­ல் தோ்வானாா். இதனிடையே நிா்வாக காரணங்களுக்காக, ஊராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. சிலா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தலைவரான பவுன்தாய் காட்டுராஜா, திங்கள்கிழமை வட்டார வளா்ச்சிஅதிகாரிகள் லாரன்ஸ், குணவதி ஆகியோரிடம் முறையீடு செய்தாா். இந்நிலையில் உயா் அதிகாரிகளின் உத்தரவுப்படி கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளனா். இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பவுன்தாய் காட்டுராஜா, திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மது குடிப்போரின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பெண் தலைவராக நான் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கேமரா தேவைப்படுகிறது. அருகில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கடத்தல், பிரதான சாலையில் விபத்து மற்றும் தகாத சம்பவங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கேமரா பொருத்துவது அவசியமாகிறது. இதற்காக, மாவட்ட உயா் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு, மனு அனுப்பியுள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT