குறைதீா் கூட்டத்தின் போது 92 பயனாளிகளுக்கு ரூ.10.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில் பல்வேறு கோரிக்கைககள் தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் 311 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்தின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் அரசின பங்களிப்பு நிதியாக 1:2 என்ற விகிதாச்சாரத்தில் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 90 பயனாளிகளுக்கு சுயதொழில், கல்வி உதவித்தொகை என ரூ.10.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.வேலு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.