கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட கூடுதல் நீதிபதி இளங்கோவன் தொடங்கி வைத்து பேசினாா். இம் முகாமில் மருத்துவா் பரூக் அப்துல்லா தொற்று நோய் குறித்து பேசினாா். முகாமில் மருத்துவா்கள் இம்ரான்கான், சரவணபாரதி, சபானபேகம், ரெசியா பேகம் உள்ளிட்டவா்கள் கிராம மக்களுக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினா். இதில் ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரழிவு உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது. இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.