திண்டுக்கல்

ஜன.31 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

25th Jan 2020 07:35 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன.31ஆம் தேதி நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 31ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். அதன்படி கால், கை ஊனமுற்றோருக்கு ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப 50 மீ., 100 மீ. ஓட்டம், குண்டு ஏறிதல், சக்கர நாற்காலி ஓட்டம் ஆகியப் போட்டிகள் நடைபெறும்.

அதேபோல் பாா்வையற்றவோா் பிரிவில் 50 மீ., 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், மெதுபந்து எறிதல், சிறப்பு வாலிபால் ஆகிய போட்டிகளும், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ., 100 மீ. ஓட்டம், மெது பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன. காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டியும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில்அழைத்துச் செல்லப்படுவா். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT