பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இணை இயக்குநரிடம் கால்நடைத்துறை இயக்குநா் ஞானசேகரன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநராக பெ.சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்து என்பவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியாற்றி வந்தாா். அவா் மீது முறைகேடு புகாா் எழுந்த நிலையில், கடந்த மே மாதம் பணி ஓய்வூபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இணை இயக்குநா் சாமுவேல் ஜெபராஜ் வேதமுத்துவிடம், கால்நடைத்துறை இயக்குநா் ஞானசேகரன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், முன்னாள் இணை இயக்குநா் மட்டுமின்றி மேலும் சில கால்நடைத்துறை பணியாளா்களிடமும் விசாரணை நடைபெற்றது.