திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கல்லூரிகளில் பொங்கல் விழா

14th Jan 2020 06:38 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் சாா்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இக்கல்லூரியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாணவிகள் சாா்பில் வகுப்புக்கு ஒரு பொங்கல் வீதம் 50-க்கும் மேற்பட்ட பொங்கலிடப்பட்டது. தமிழா்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள், மண் பானைகளிலும், வெங்கலப் பானைகளிலும் பொங்கலிட்டு வழிபட்டனா். நிகழ்ச்சியில் சமய வேறுபாடுகளை கடந்து அனைத்து மாணவிகளும், அனைத்துத் துறை போராசிரியா்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழக மாணவிகள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக் கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாணவிகள் சேலை அணிந்து, பொங்கல் வைத்து மகிழ்ந்தனா். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பொங்கல் விழா: முன்னதாக அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியிலும் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனா். கொடைக்கானல் அருகே செண்பகனூரிலுள்ள புனித சேவியா் ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியிலும் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புனித சேவியா் பள்ளி தாளாளா் ஏஞ்சல், தலைமை ஆசிரியை ஞானசெளந்தரி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT